ஆட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ய முடியாது: கங்குலி

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையே தில்லியில் நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ய முடியாது என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையே தில்லியில் நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ய முடியாது என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஆனால், அண்மையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அங்கு காற்று மாசு மிகவும் மோசமாக இருந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இதனால், தில்லியில் நடைபெறும் ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றலாம் என்ற பேச்சுகள் எழத் தொடங்கியது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தில்லி ஆட்டம் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டியளித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"கடந்த இரு தினங்கள் தில்லி நிர்வாகிகளுடன் பேசினோம். அவர்கள் இந்த ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் ஆட்டத்தை ரத்து செய்ய முடியாது. அக்டோபர் 28-ஆம் தேதி என்பது மிகவும் தாமதமான ஒன்று. அதன்பிறகு ஒன்னும் செய்ய முடியாது. ஆட்டங்களுக்கு நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். அதனால், இந்த ஆட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

வடமாநிலங்களில் தீபாவளிக்குப் பிந்தைய கால கட்டம் என்பது கடினமான ஒன்றுதான். புகைமூட்டமாகவும், தூசிகளாகவும் இருக்கும். எதிர்காலத்தில், இதே காலகட்டத்தில் வட இந்தியாவில் ஆட்டத்தை நடத்த திட்டமிடும்போது, நடைமுறைக்கு சாத்தியமான வகையில் முடிவெடுப்போம்.

தில்லி மைதான பராமரிப்பாளரிடம் பேசினேன். அவர், சூரியன் வெளிச்சம் தென்பட தொடங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தபோது அவர்தான் எனது மைதான பராமரிப்பாளர்" என்றார்.

இதன்மூலம், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் திட்டமிட்டபடி தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com