இந்தப் பதவியிலும் ஏன் உங்களை நியமிக்கவில்லை?: மிஸ்பா உல் ஹக்கை கலாய்த்த ஷோயிப் அக்தர்

இந்தப் பதவியிலும் ஏன் உங்களை நியமிக்கவில்லை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக்கை முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கிண்டல் செய்துள்ளார்.  
ஆடுகளத்தில் மிஸ்பா மற்றும் அக்தர்
ஆடுகளத்தில் மிஸ்பா மற்றும் அக்தர்

லாகூர்: இந்தப் பதவியிலும் ஏன் உங்களை நியமிக்கவில்லை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக்கை முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கிண்டல் செய்துள்ளார்.  

பாகிஸ்தான் அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று பெயர் பெற்ற மிஸ்பா உல் ஹக்கைத் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதனன்று அறிவித்தது. அத்துடன் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸைப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது. இருவருக்கும் மூன்று வருட ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்டுகள், 162 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் பதவியிலும் ஏன் உங்களை நியமிக்கவில்லை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக்கை முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கிண்டல் செய்துள்ளார்.  

இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று அவர் பதிவிட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் என இரட்டைப் பதவிகளுக்கு வாழ்த்துக்கள் மிஸ்பா உல் ஹக். இத்துடன் சேர்த்து அவரை ஏன் அப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் நியமிக்கவில்லை என்று ஆச்சர்யமாக உள்ளது. ஹா ஹா ஹா ஹா! நான் விளையாட்டுக்குச் சொன்னேன். முன்போலவே  அவர் ஆச்சர்யங்களை நிகழ்த்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com