துளிகள்...


    கஜகஸ்தானின் நூர்சுல்தான் நகரில் வரும் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 65 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா முதல்நிலை வீரராக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். 


    பெங்களூருவில் நடைபெற்று வரும் துலிப் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை இந்தியா ரெட் அணி 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்திருந்தது. முன்னதாக கிரீன் அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


    வரும் 15-ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ள இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  


    மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய டி20 அணியில் 15 வயதே ஆன பள்ளி மாணவி ஷபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க மகளிர் அணியுடன் 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் ஆடவுள்ளது இந்திய மகளிர் அணி. 24-இல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com