பிரேசில்-கொலம்பியா நட்பு ஆட்டம் டிரா

கொலம்பியா மற்றும் பிரேசில் இடையே நடைபெற்ற நட்பு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
பிரேசில்-கொலம்பியா நட்பு ஆட்டம் டிரா

கொலம்பியா மற்றும் பிரேசில் இடையே நடைபெற்ற நட்பு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
 மியாமியில் 65, 232 பார்வையாளர்கள் குழுமியிருந்த ஹாட்ர் ராக் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரு அணிகள் இடையிலான நட்பு ஆட்டம் நடைபெற்றது. நட்சத்திர வீரர் நெய்மர் நீண்ட நாள்கள் கழித்து பிரேசில் அணியில் இடம் பெற்றார்.
 ஆட்டத்தின் 20-ஆவது நிமிடத்தில் நெய்மர் கடத்தி தந்த பந்தை அற்புதமாக கோலாக்கினார் கஸ்மீரா.
 அதன் பின் எழுச்சி பெற்ற கொலம்பியா வீரர்கள் லூயிஸ் மரியல், ரோஜர் மார்டினஸ் அபாரமாக கோலடித்து 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தனர்.
 நெய்மர் அபாரம்: அதன் பின் 58-ஆவது நிமிடத்தில் நெய்மர் அபாரமாக ஆடி கோலடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. அடுத்த ஆட்டத்தில் பிரேசில் -பெரு அணிகளும், கொலம்பியா-வெனிசுþலாவும் மோதுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com