பரபரப்பான இறுதிச்சுற்று: யு-19 ஆசியக் கோப்பையை வென்றது இந்திய அணி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.
பரபரப்பான இறுதிச்சுற்று: யு-19 ஆசியக் கோப்பையை வென்றது இந்திய அணி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.

கொழும்பில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதலில் விளையாடிய இந்திய யு-19 அணி, 32.4 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஜுரெல் 33 ரன்களும் சுழற்பந்துவீச்சாளர் கரன் லால் 37 ரன்களும் எடுத்தார்கள். வங்கதேச அணியின் செளதுரி, ஷமிம் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

எளிதான இலக்கை எதிர்கொள்ள வங்கதேச யு-19 அணி மிகவும் சிரமப்பட்டது. 51 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் இலக்கை விரட்ட மிகவும் முயன்றார்கள். கடைசியில் வங்கதேச அணியால் 33 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தன்ஷிமும் ரகிபுலும் ஓரளவு ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகில் சென்றார்கள். எனினும் 33-வது ஓவரில் இரு விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார் அதர்வா அன்கோல்கர். ஆட்ட நாயகனும் விருதும் அவருக்கே சென்றது. 

யு-19 ஆசியக் கோப்பையை வென்ற அணிகள்

1989: இந்தியா
2003: இந்தியா
2012: இந்தியா & பாகிஸ்தான்
2014: இந்தியா
2016: இந்தியா
2017: ஆப்கானிஸ்தான்
2018: இந்தியா
2019: இந்தியா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com