19-வயதுக்குட்பட்டோர் ஆசிய கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.கொழும்புவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை
கோப்பை வென்ற இந்திய அணியினர்.
கோப்பை வென்ற இந்திய அணியினர்.

19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

கொழும்புவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  கேப்டன் துருவ் ஜெரல் 33, கரண் லால் 37, சாஸ்வத் ரவாத் 19 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை சேர்த்தனர். ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதில் மூவர் டக் அவுட்டாயினர். வங்கதேசத் தரப்பில் மிருத்துஞ்சய் செளதரி 3-18, ஷமிக் ஹுசைன் 3-8 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

107 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியும் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் அக்பர் அலி 23, மிருத்துஞ்சய் செளதரி 21 ஆகியோர் ஒரளவு நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். 

எனினும் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களது முயற்சியை முறியடித்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

இந்தியா த்ரில் வெற்றி: இறுதியில் 33 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். இந்திய தரப்பில் அதர்வா அங்கோல்கர் 5-28 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங் 3-12 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com