தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றது பிசிசிஐ

ஒப்பந்த விதிகளை மீறி கரிபீயன் ப்ரீமியர் லீக் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தின் கீழ் உள்ளார். இதன்படி தனியார் டி20 லீக் போட்டிகளில் பிசிசிஐ அனுமதி இல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார் தினேஷ். அதன் உரிமையாளர் ஷாருக்கானுக்கு சொந்தமாக சிபிஎல் லீகில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.  அந்த அணியின் வீரர்கள் தங்கும் அறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதன் சீருடை அணிந்து பங்கேற்றார் தினேஷ் கார்த்திக்.
இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோர்ரி. இதையடுத்து தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், கேகேஆர் பயிற்சியாளர் பிரென்டன் மெக்கல்லம் வேண்டுகோளால் தான் சிபிஎல் அணி நிகழ்வில் பங்கேற்றதாகவும் பதிலளித்திருந்தார். அவரது மன்னிப்பை கோரும் கடிதத்தை ஏற்பதாகவும், இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com