உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் தீபக் புனியா!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தீபக் புனியா.
தீபக் புனியா (United World Wrestling/Twitter)
தீபக் புனியா (United World Wrestling/Twitter)

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தீபக் புனியா. இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் அவர் தகுதியடைந்துள்ளார்.

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 61 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ராகுல் அவரே கஸகஸ்தானின் ரஸ்ஸுல் லலியேவை எதிர்கொண்டார். இதில் 10-7 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் ராகுல். அரையிறுதிக்கு அவர் தகுதி பெற்றாலும் 61 கிலோ எடைப் பிரிவு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இல்லை. இதனால் பதக்கம் பெறுவதற்கான ஒரே குறிக்கோளுடன் அரையிறுதியில் ஜார்ஜியாவின் பெகோவை எதிர்கொண்டார். ராகுல் கடுமையாகப் போராடியும் 10-6 என்கிற புள்ளிக்கணக்கில் ஜார்ஜியா வீரர் வென்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துனான போட்டியில் ராகுல் போட்டியிடவுள்ளார். 

86 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிச் சுற்றில், இந்தியாவின் தீபக் புனியா, கொலம்பியாவின் கார்லோஸ் மெண்டஸை 7-6 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். இந்தப் போட்டியின் மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறும் 4-வது இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். இதற்கு முன்பு வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா ஆகியோர் தகுதி பெற்றார்கள்.

அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீபனை எதிர்கொண்டார் 20 வயது தீபக் புனியா. ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய புனியா, 8-2 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com