துளிகள்...

இரட்டை ஆதாயம் தரும் பதவி விவகாரம் எதிரொலியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கிய ஐ லீக் அணிகளில் ஒன்றான யுனைடெட் சிக்கிம் எஃப்சி அணியை கலைக்க முடிவு செய்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் பாய்ச்சுங்

இரட்டை ஆதாயம் தரும் பதவி விவகாரம் எதிரொலியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கிய ஐ லீக் அணிகளில் ஒன்றான யுனைடெட் சிக்கிம் எஃப்சி அணியை கலைக்க முடிவு செய்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் புட்டியா. சிக்கிம் கால்பந்து சங்க முக்கிய பொறுப்பேற்கும் நிலையில் புட்டியா இந்த முடிவை எடுத்துள்ளார்.

வலது கால்மூட்டில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கடந்த 9 மாதங்களாக ஆடாமல் இருந்து வந்த 3 முறை உலக பாட்மிண்டன் சாம்பியன் கரோலினா மரின், தான் பங்கேற்ற சீன ஓபன் போட்டியில் பட்டம் வென்று தனது இருப்பை உறுதி செய்துள்ளார். சாங்ஷெளவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் தைபேயின் டை சூ யிங்கை வீழ்த்தி பட்டம் வென்றார்.

தாஷ்கண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை (16 வயது) தகுதிச் சுற்று ஆட்டத்தில் 1-1 என உஸ்பெகிஸ்தானுடன் டிரா கண்ட இந்தியா வரும் 2020-இல் பஹ்ரைனில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.  ஏற்கெனவே குரூப் பி பிரிவு ஆட்டத்தில் துர்க்மேனிஸ்தான், பஹ்ரைனை 5-0 என வெற்றி பெற்றிருந்தது இந்தியா. தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேசிய கார்பந்த சாம்பியன் போட்டியில் மோட்டார் பைக் மீது பந்தய கார் மோதியதில் தம்பதி அவர்களது மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய சாம்பியன் அர்ஜுன விருதாளர் கெளரவ் கில், அவரது சக டிரைவர் மற்றும் ஜேகே, எம்ஆர்எப் டயர்ஸ், மஹிந்திரா, மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் போன்றவர்கள் மீதும் சம்தாரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com