துளிகள்...

சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்று வரும் ஆரக்கிள் நெட்சூட் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் நான்காம் நிலை வீராங்கனை நியூஸி.யின் ஜோல் கிங்கை 11-9, 6-11, 11-3 என்ற கேம் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து அரையி

சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்று வரும் ஆரக்கிள் நெட்சூட் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் நான்காம் நிலை வீராங்கனை நியூஸி.யின் ஜோல் கிங்கை 11-9, 6-11, 11-3 என்ற கேம் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சனிக்கிழமை  நடைபெற்ற எம்ஆர்எப் எப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அனிஷ் ஷெட்டி (பெங்களூரு), முகமது மிக்கெயில் (சென்னை) ஆகியோர் பட்டம் வென்றனர்.

கொரிய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமடோவிடம் 13-21, 15-21 என்ற கேம் கணக்கில் தோல்வியுற்றார் இந்திய வீரர் காஷ்யப்.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 99 அகாதெமிகளில் பயிற்சி பெறும் 2625 வீரர், வீராங்கனைகளுக்கு கைச்செலவுக்காக ரூ.7.87 கோடியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

பஞ்ச்குலாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற புரோகபடி லீக் ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீர்ஸ் அணியை 37-30 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது யுபி யோத்தாஸ் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com