மே.இ.தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய மகளிர் அணிகள் அறிவிப்பு

மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்துக்கான இந்திய ஒருநாள், டி20 மகளிர் அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மே.இ.தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய மகளிர் அணிகள் அறிவிப்பு

மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்துக்கான இந்திய ஒருநாள், டி20 மகளிர் அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் மாதம் மே.இ.தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்களில் பங்கேற்று ஆடுகிறது. இதற்கான அணி மகளிர் தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஒருநாள் அணிக்கும், ஹர்மன்ப்ரீத் கெளர் டி20 அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள்  அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கெளர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, பூனம் ரெளட், டி. ஹேமலதா, ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மான்ஸி ஜோஷி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்த், ராஜேஸ்வரி கெய்க்வாட், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பிரியா புனியா, சுஷ்மா வர்மா.
டி20 அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லின் தியோல், தீப்தி சர்மா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர), பூனம் யாதவ், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, அனுஜா பட்டீல், ஷிகா பாண்டே, பூஜா வஸ்தராக்கர், மான்ஸி ஜோஷி, அருந்ததி ரெட்டி.
நவம்பர் 1-ஆம் தேதி ஆண்டிகுவாவில் முதல் ஒரு நாள் ஆட்டம் தொடங்குகிறது. டி20 முதல் ஆட்டம் செயின்ட் லூசியா, கயானாவில் நடக்கிறது. தற்போது உள்ளூரில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியுடன் டி20 தொடரில் ஆடி வருகிறது இந்திய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com