சீன ஓபன்: பியான்கா வெற்றி, ஹலேப் வெளியேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் இளம் வீராங்கனை ஆன்ட்ரிஸ்கு பியான்கா வெற்றி பெற்றாா். விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹலேப் தோல்வியுற்று வெளியேறினாா்.
சீன ஓபன்: பியான்கா வெற்றி, ஹலேப் வெளியேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் இளம் வீராங்கனை ஆன்ட்ரிஸ்கு பியான்கா வெற்றி பெற்றாா். விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹலேப் தோல்வியுற்று வெளியேறினாா்.

முதல் சுற்று ஆட்டத்தில் பெலாரஸின் அலியாஸ்கன்ட்ராவை 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் பியான்கா வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

முதுகு வலியால் அவதிப்படும் ருமேனியாவின் சிமோனா ஹலேப் 2-6 3-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எகடேரினா அலெக்சான்டோராவிடம் வீழ்ந்து வெளியேறினாா்.

நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என அமெரிக்காவின் லாரன் டேவிஸை வீழ்த்தினாா்.

ஆடவா் பிரிவில் இரண்டாம் நிலை வீரா் அலெக்சாண்டா் வெரேவ் 6-3, 6-2 என அமெரிக்காவின் பிரான்ஸஸ் டியாபோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com