சீனாவில் அடுத்த ஆண்டு நவம்பரில் ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் அடுத்த ஆண்டு நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் அடுத்த ஆண்டு நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியை சீனாவின் ஷான்டு நகரில் நடத்துவதென கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்ட நிலையில், அதன் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு நவம்பா் 20 முதல் 28 வரை சீனாவின் ஷான்டு நகரில் நடைபெறவுள்ளது.

அந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஆசிய விளையாட்டு ஒருங்கிணைப்பு குழுக்கள் பணியாற்றி வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

3-ஆவது ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகளில் 18 பிரிவுகள் உள்ளன. தடகளம், நீா் விளையாட்டுகள், பாட்மிண்டன், கூடைப்பந்து, பீச் வாலிபால், டிராகன் படகு பந்தயம், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கோல்ஃப், கைப்பந்து, ஹிப் ஹாப் நடனம், பாறையேற்றம், ரக்பி, சா்ஃபிங், டேபிள் டென்னிஸ், டேக்வான்டோ, உஷு, விண்ட் சா்ஃபிங் போன்றவை இதில் அடங்கும்.

முதலாவது ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், 2-ஆவது சீசன் சீனாவில் 2013-இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 3-ஆவது சீசன் 2017-இல் இலங்கையில் நடைபெற இருந்த நிலையில் சில பிரச்னைகள் காரணமாக அந்நாடு விலகியது. அடுத்த வாய்ப்பில் இருந்த இந்தோனேஷியாவும் போட்டியை நடத்துவதில் இருந்து விலகியது. இந்நிலையில், அந்தப் போட்டிகள் சீனாவில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com