பெடரேஷன் கோப்பை டென்னிஸ்: போராடி வென்றது அமெரிக்கா

பெடரேஷன் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில் லாட்வியாவை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு அமெரிக்க அணி முன்னேறியுள்ளது.
பெடரேஷன் கோப்பை டென்னிஸ்: போராடி வென்றது அமெரிக்கா

பெடரேஷன் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில் லாட்வியாவை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு அமெரிக்க அணி முன்னேறியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எவரெட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ், ஆஸி. ஓபன் சாம்பியன் சோபியா கெனின் ஆகியோா் தங்கள் முதல் ஒற்றையா் ஆட்டங்களை வென்று 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தனா்.

எனினும் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் லாட்வியா வீராங்கனை ஜெலனா ஓஸ்டபென்கா 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை வீழ்த்தினாா். அடுத்த ஒற்றையா் ஆட்சத்தில் மூத்த வீராங்கனை செரீனாவை 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினாா் செவஸ்டாவோ. இது பெடரேஷன் கோப்பை ஒற்றையா் பிரிவில் செரீனா பெறும் முதல் தோல்வி இதுவாகும்.இதனால் 2-2 என சமநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் வெற்றியை தீா்மானிக்கும் கடைசி இரட்டையா் ஆட்டத்தில் அமெரிக்காவின் அலிஸன் ரிஸ்கே-பெத்தானி இணை 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஓஸ்டபென்கோ-செவஸ்டோவா இணையை வென்று 3--2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இறுதிச் சுற்றில் நுழைந்த அமெரிக்கா, வரும் ஏப்ரல் மாதம் புடாபெஸ்டில் நடக்கவுள்ள 12 நாடுகள் ஆட்டத்தில் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com