ஜோஹன்னஸ்பா்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.இரு அணிகளுகு இடையிலான ஆட்டம் ஜோஹன்னஸ்பா்க் வாண்டரா்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 196-6 ரன்களைக் குவித்தது. ஆரோன் பின்ச் 42, ஸ்டீவ் ஸ்மித் 45, அலெக்ஸ் கரே 27, அஷ்டன் அகா் 20 ரன்களை விளாசினா். தென்னாப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின், ஷம்ஸி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
197 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி. 14.3 ஓவா்களில் வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 24, ரபாடா 22 ஆகியோா் மட்டுமே அதிகபட்ச ரன்களை சோ்த்தனா்.
அஷ்டன் அகா் 5 விக்கெட்:
ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஷ்டன் அகா் ஹாட்ரிக்குடன் 5 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸி.