கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான வாசிம் ஜாஃபர் சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

1996-97 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஜாஃபர், இந்தியாவுக்காக 31 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2008ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 

ஜாஃபர் 260 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 19,410 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 57 சதங்களும், 91 அரை சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 314. 

ஓய்வு குறித்து ஜாஃபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது பள்ளி நாட்களில் இருந்து கிரிக்கெட் வரை, எனது திறமைகளை மேம்படுத்த உதவிய எனது பயிற்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி. என் மீது நம்பிக்கை காட்டிய தேர்வாளர்கள், நான் விளையாடியபோது இருந்த அனைத்து கேப்டன்களுக்கும், சக வீரர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.

நான் விளையாட்டைப் பற்றி அதிகம் கற்றுக் கொண்டேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளாக அவை இருக்கும். எனது நீண்ட பயணத்தில் ஒரு நிலையான தூணாக இருந்த ஊழியர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய பி.சி.சி.ஐ மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் விதர்பா கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி. 

இந்தியாவுக்காக விளையாடி என் தந்தையின் கனவை நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். கிரிக்கெட்டில் இத்தனை வருடங்கள் கழித்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் இது. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த சிவப்பு பந்து வடிவத்தைப் போலவே முதல் இன்னிங்ஸ் மட்டுமே முடிந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அது பயிற்சி, வர்ணனை போன்றவையாக இருக்கக்கூடும்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com