இந்தியாவுக்காக விளையாடாத மும்பை வீரர்: ரவி சாஸ்திரி ஆதங்கம்

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் போனது இந்திய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம்...
இந்தியாவுக்காக விளையாடாத மும்பை வீரர்: ரவி சாஸ்திரி ஆதங்கம்

மும்பை வீரர் அமோல் முசும்தார், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் போனது இந்திய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

முசும்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ரவி சாஸ்திரி, அவரைப் பற்றி கூறியதாவது:

ரஞ்சி கோப்பை போட்டியின் மகத்தான வீரரான முசும்தாருடன் எடுத்த புகைப்படம். என்னுடைய கடைசி ரஞ்சி சீஸன் தான் அவருடைய முதல் சீஸன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் போனது இந்திய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் என இன்னும் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதில் அளித்த முசும்தார், சிறிய வயதில் ரவி சாஸ்திரி தான் எனது ஹீரோ. 1993-94-ல் மும்பை அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது, என் தோள் மீது கையைப் போட்டு, நன்றாக விளையாடினாய் எனப் பாராட்டினார். இந்த நினைவை என்னால் இன்றைக்கும் மறக்க முடியாது. கேப்டனுக்கு நன்றி. வெற்றி பெற வேண்டும் எனக் கற்றுத் தந்தீர்கள் என்றார்.

1993-94-ல் முதல் தர கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமான மும்பையைச் சேர்ந்த முசும்தார், 2013 வரை விளையாடினார். 171 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 11167 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 30 சதங்களும் 60 அரை சதங்களும் அடங்கும். 2014-ல் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com