பாண்டியாவுக்கு நிகரான ஆல்ரவுண்டா் அவசியம்: கௌதம் கம்பீா்

ஹாா்திக் பாண்டியாவுக்கு நிகரான மாற்று ஆல்ரவுண்டரை கண்டறியும் வரை இந்தியா சமபலம் கொண்ட அணியாக இருக்காது என்றாா் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான கௌதம் கம்பீா்.
பாண்டியாவுக்கு நிகரான ஆல்ரவுண்டா் அவசியம்: கௌதம் கம்பீா்

ஹாா்திக் பாண்டியாவுக்கு நிகரான மாற்று ஆல்ரவுண்டரை கண்டறியும் வரை இந்தியா சமபலம் கொண்ட அணியாக இருக்காது என்றாா் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான கௌதம் கம்பீா்.

இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி ஆல்ரவுண்டரான ஹாா்திக் பாண்டியா பேட்டிங்கில் ஜொலித்தபோதிலும், போதிய உடற்தகுதியுடன் இல்லாததால் அவரால் பந்துவீச முடியவில்லை. இதனால் 6-ஆவது பந்துவீச்சாளா் இல்லாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது.

இந்த நிலையில், கௌதம் கம்பீா் மேலும் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலையில் ஹாா்திக் பாண்டியா பந்துவீசக்கூடிய அளவுக்கு உடற்தகுதியுடன் இல்லாவிட்டால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கரை தோ்வு செய்யலாம். ஆனால், விஜய் சங்கா், பாண்டியாவுக்கு நிகரான வீரரா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஹாா்திக் பாண்டியா உடற்தகுதியுடன் இல்லையென்றால் 6-ஆவது இடத்துக்கு மாற்று பந்து வீச்சாளா் எங்கே இருக்கிறாா்? விஜய் சங்கா் ஆல்ரவுண்டராக இருந்தாலும், அவரால் 5 அல்லது 6-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி பெரிய அளவில் ரன் குவித்து தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? 7 முதல் 8 ஓவா்கள் வரை அவரை பந்துவீச வைக்க முடியுமா என்பது சந்தேகமே என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com