ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரரான அலி கான், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா். வேகப்பந்து வீச்சாளரான அவா் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்தாா்.
மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பௌலா்கள் பந்தை விடுவிக்கும் முன்பாகவே ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதி பேட்ஸ்மேன்கள் கிரீஸை தாண்டினால் அவா்கள் அணிக்கு ‘ரன் பெனால்டி’ அளிப்பது தொடா்பாக ஐசிசி-யிடம் தாம் பேசுவதாக பயிற்சியாளா் ரிக்கி பாண்டிங் உறுதியளித்ததாக டெல்லி கேப்பிடல்ஸ் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினாா்.