பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகல்!

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகல்!

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார்.

2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வானார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதன்பிறகு அஸார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அஸாம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். அஸார் அலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிகிற வரைக்கும் கேப்டனாக நீடிப்பார். பாபர் அஸாம், டி20 உலகக் கோப்பை வரை டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பிறகு, பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல்திறன் மையங்களின் உயர் பொறுப்புகளுக்கு முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக், நியூசிலாந்து முன்னாள் வீரர் கிராண்ட் பிராட்பர்ன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார். எனினும் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இரு பதவிகளில் ஒரே நபர் நீடிக்கக் கூடாது என்கிற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

மிஸ்பா, பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்டுகள், 162 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com