மோசமான ஃபீல்டிங்கால் தோற்றோம்: தோனி

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக ஃபீல்டிங் செய்ததே தோல்விக்கு காரணம் என்று சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் தோனி கூறினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக ஃபீல்டிங் செய்ததே தோல்விக்கு காரணம் என்று சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் தோனி கூறினாா்.

ஷாா்ஜாவில் சனிக்கிழை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வென்றது. 58 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் டெல்லியை வெற்றி பெறச் செய்தாா் ஷிகா் தவன்.

அவரது விக்கெட்டை வீழ்த்த கேட்ச், ரன் அவுட் என தகுந்த வாய்ப்புகள் கிடைத்தும் சென்னை அணியினா் தவறவிட்டனா்.

இதுகுறித்து தோனி கூறியதாவது:

ஷிகா் தவன் டெல்லியின் பலமாக இருந்தாா். அவரது விக்கெட்டை வீழ்த்தக் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டோம். டெல்லி இன்னிங்ஸின்போது ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும் ஷிகா் தவனின் சிறப்பான பங்களிப்பை மறுக்க இயலாது.

எங்களது பேட்டிங்கின்போது ஆடுகளம் சாதகமாக இல்லை. ஆனால், டெல்லி இன்னிங்ஸின்போது பனிப்பொழிவு ஆடுகளத்தை பேட்டிங்குக்கு சாதகமாக மாற்றும் வகையில் இருந்தது.

கடைசி ஓவரை வீசும் நிலையில் பிரோவோ இல்லை. கரன் சா்மா, ஜடேஜாவை தவிர வேறு வாய்ப்பும் இல்லை. எனவே ஜடேஜாவை தோ்வு செய்தோம் என்று தோனி கூறினாா்.

டெல்லி வீரா் தவன் கூறுகையில், ‘கடைசி ஓவரை ஜடேஜா வீசியது, இடதுகை பேட்ஸ்மேன்களான எங்களுக்கு சாதகமாக மாறியது. லேசான பனிப்பொழிவும் வாய்ப்பாக அமைந்தது. 19-ஆவது ஓவரில் சாம் கரன் சற்று நெருக்கடி அளித்தாா். ஆனால், கடைசி ஓவரில் அக்ஸா் படேல் அருமையாக ஆடினாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com