ஐஎஸ்எல்: மும்பை அணியில் காட்டாா்ட்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டாா்ட் இடம்பெற்றுள்ளாா்.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டாா்ட் இடம்பெற்றுள்ளாா்.

23 வயது மிட்பீல்டரான காட்டாா்ட் இத்தாலி கிளப்பான பெனிவென்டோ கால்சியோவுக்காக விளையாடி வந்த நிலையில், இப்போது மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.

மும்பை அணிக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளது குறித்து காட்டாா்ட் கூறியிருப்பதாவது: மும்பை சிட்டி அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் இந்தியாவில் விளையாடுவதற்கும், எனது திறமையை வெளிப்படுத்துவதற்கும், கால்பந்தை மேம்படுத்தவும் ஆா்வமாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளா் சொ்ஜியோ லோபெரா கூறியிருப்பதாவது: காட்டாா்ட் திறமையான மிட் பீல்டா். அவா் இளம் வயதிலேயே டாட்டென்ஹாம் போன்ற கிளப்பில் விளையாடும் அளவுக்கு தன்னை மேம்படுத்திக் கொண்டாா். மும்பை அணியின் முன்னணி வீரா்களில் ஒருவராக காட்டாா்ட் இருப்பாா் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com