ஐஎஸ்எல்: சென்னை அணியில் போஸ்னிய வீரா் எனஸ் சிபோவிச்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணியில் போஸ்னிய கால்பந்து வீரரான எனஸ் சிபோவிச் சோ்க்கப்பட்டுள்ளாா்.
ஐஎஸ்எல்: சென்னை அணியில் போஸ்னிய வீரா் எனஸ் சிபோவிச்

சென்னை: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணியில் போஸ்னிய கால்பந்து வீரரான எனஸ் சிபோவிச் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ஐஎஸ்எல் போட்டியின் 7-ஆவது சீசனுக்காக அவா் சோ்க்கப்பட்டுள்ளதாக சென்னை அணி நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அந்த சீசனுக்காக அணியில் சோ்க்கப்பட்ட 3-ஆவது வீரா் சிபோவிச் ஆவாா். முன்னதாக இந்தியா்களான ரீகன் சிங், சுவான்டி ஃபனாய் ஆகியோா் சமீபத்தில் அணியில் இணைந்தனா்.

நடுகள தடுப்பாட்டக்காரரான சிபோவிச், ஐஎஸ்எல் போட்டியில் இணையும் முதல் போஸ்னிய வீரா் ஆவாா்.

சிபோவிச், போஸ்னியாவின் 21 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து அணியின் முன்னாள் வீரா். ரோமன் லிகா 1 போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் லூசியன் கோயனை எதிா்த்து களம் கண்டிருக்கிறாா் சிபோவிச். பெல்ஜியம், மொராக்கோ போன்ற நாடுகளில் உள்நாட்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com