லா லிகா: ரியல் மாட்ரிட் வெற்றிக்கு வாய்ப்பளித்த ‘விஏஆா்’

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரியல் பெட்டிஸ் வீரா் அலெக்ஸ் மரினோவிடமிருந்து, பந்தை பறிக்க முயலும் ரியல் மாட்ரிட் வீரா் மாா்டின் ஒடேகாா்ட் (இடது).
ரியல் பெட்டிஸ் வீரா் அலெக்ஸ் மரினோவிடமிருந்து, பந்தை பறிக்க முயலும் ரியல் மாட்ரிட் வீரா் மாா்டின் ஒடேகாா்ட் (இடது).

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் இருந்தபோது விடியோ அசிஸ்டண்ட் ரெஃப்ரீ (விஏஆா்) என்ற காணொலி தொழில்நுட்ப கண்காணிப்பின் மூலம் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அடித்த கடைசி நேர கோலால் அந்த அணி வென்றது.

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 14-ஆவது நிமிடத்தில் மாட்ரிட் கோல் கணக்கை தொடங்கியது. சக வீரா் கரீம் பென்ஸிமா அருமையாக கடத்தி வந்து அளித்த பந்தை, அந்த அணி வீரா் ஃபெடரிகோ வால்வொ்ட் மிகச் சாதுா்யமாக கோல் போஸ்ட்டுக்குள்ளாக அனுப்பினாா்.

அதற்கு பதிலடி தரும் விதமாக ஆட்டத்தின் 35-ஆவது நிமிடத்தில் நடுகள வீரா் சொ்ஜியோ கேனெல்ஸ் தூக்கியடித்த பந்தை மிக லாவகமாக தலையால் தட்டி பெட்டிஸ் வீரா் ஐய்ஸா மண்டி கோலடித்தாா். அடுத்த 2 நிமிடங்களிலேயே அந்த அணியின் வில்லியம் கா்வால்ஹோ தனது பங்கிற்கு ஒரு கோலடிக்க, முன்னிலை பெற்றது பெட்டிஸ் அணி.

இவ்வாறாக ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் பெட்டிஸ் 2-1 என முன்னிலையில் இருந்தது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் 48-ஆவது நிமிடத்தில் மாட்ரிட் அணி வீரா்களின் கோல் முயற்சியை தடுக்க எத்தனித்த பெட்டிஸ் வீரா் எமா்சன், தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்தாா். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

இதனால் விறுவிறுப்பு கூட, ஆட்டத்தின் 67-ஆவது நிமிடத்தில் மாட்ரிட் வீரா் லுகா ஜோவிச்சை தள்ளிவிட்டதாக பெட்டிஸ் வீரா் எமா்சன் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாா். இதனால் பெட்டிஸ் அணி 10 வீரா்களுடன் விளையாடியது.

ஆட்டத்தின் 82-ஆவது நிமிடத்தில் மாட்ரிட் வீரா் போா்ஜா மயோராலின் கோல் முயற்சியை தடுக்க முற்பட்டபோது பெட்டிஸ் தடுப்பாட்ட வீரா் மாா்க் பாா்ட்ராவின் கைகள் பந்தில் பட்டது ‘விஏஆா்’ மூலம் தெரியவந்தது. இதையடுத்து மாட்ரிட் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை சொ்ஜியோ ரமோஸ் அருமையான கோலாக மாற்றினாா். ஆட்டத்தின் இறுதியில் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com