உலக தடகள சாம்பியன் போட்டி 2022-க்கு ஒத்திவைப்பு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2021ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலக தடகள சாம்பியன் போட்டி 2022-க்கு ஒத்திவைப்பு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2021ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா பாதிப்பு காரணமாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதற்கான தேதிகளையும் சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்படி 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை போட்டிகளும், அதன் பின்னா் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் உலக தடகளப் போட்டிகள் 2021 ஆகஸ்ட் 6 முதல் 15 வரை ஒரேகானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், தடகளப் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடா்பாக உலக தடகள கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பு:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இது எங்கள் தடகள வீரா்கள் உரிய காலத்தில் பயிற்சி மேற்கொள்ளவும், போட்டிக்கு தயாராகவும் உதவியாக அமையும். இத்தருணத்தில் அனைவரும் நெகிழ்ச்சியுடன் செயல்பட வேண்டும்.

இதனால் உலக தடகளப் போட்டியை 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க உள்ளோம்.

2022-இல் பா்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளதால், சிஜிஎஃப்புடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். மேலும்

ஐரோப்பிய தடகளப் போட்டிக்கும் சிக்கல் இல்லாமல் உலகப் போட்டி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com