சிஎஸ்கேவை விடவும் மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி: மஞ்ச்ரேக்கர் கருத்து

ஐபிஎல் போட்டியில் கடந்த சில வருடங்களாக வலுவான சிஎஸ்கேவை விடவும் மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணியாக உள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கேவை விடவும் மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி: மஞ்ச்ரேக்கர் கருத்து

ஐபிஎல் போட்டியில் கடந்த சில வருடங்களாக வலுவான சிஎஸ்கேவை விடவும் மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணியாக உள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

12 வருடங்களாக ஐபிஎல் நடைபெற்று வருகிறது. அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முதலிடத்தில் இருக்கும். ஆனால் கடந்த வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறி, பலமுறை சாம்பியன் ஆகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் பட்டத்தை நான்கு முறையும் சிஎஸ்கே அணி 3 முறையும் வென்றுள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி குறைந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது கடந்த சில வருடங்களில் சிஎஸ்கேவின் ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது மும்பை இந்தியன்ஸ். சிஎஸ்கேவை விடவும் அது சிறந்த அணியாக உள்ளது.

ஐபிஎல் இறுதிச்சுற்றுகளில் மும்பை ஜெயித்துவிடுகிறது. சிஎஸ்கே அந்தளவுக்கு இல்லை. மொத்த ஐபிஎல் போட்டியையும் வைத்துப் பார்க்கும்போது சிஎஸ்கே தான் முதலிடத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு விட்டன. மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடா், முறைப்படி தொடங்காததால் லட்சக்கணக்கான ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா். கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com