டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக: நோ பால்களைக் கவனிக்கும் 3-ம் நடுவர்!

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளை 3-ம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக: நோ பால்களைக் கவனிக்கும் 3-ம்  நடுவர்!

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளை 3-ம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறவுள்ள ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச டி20 ஆட்டங்களிலும் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பார் என ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. 

நோல் பால் தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் உருவாவதால் இனிமேல் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது ஐசிசி. இதன்படி பந்துவீசிய சில நொடிகளில் தொலைக்காட்சி முன்பு அமர்ந்துள்ள 3-வது நடுவருக்கு அக்காட்சி அளிக்கப்படும். அதன் அடிப்படையில் நோ பாலா இல்லையா என்பதை 3-ம் நடுவர் முடிவெடுப்பார். 

கடந்த வருட ஐபிஎல் போட்டியிலும் உலகக் கோப்பைப் போட்டியிலும் நோ பால் தொடர்புடைய சர்ச்சைகள் ஏற்பட்டன. இதனால் ஐபிஎல் போட்டியிலும் நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தனி நடுவர் நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலும் நோ பால்களை 3-ம் நடுவர் கவனிப்பார் என ஐசிசி அறிவித்துள்ளது. இதில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்த நடைமுறையை அமல்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com