விடாமுயற்சிக்குப் பலன்: 11 வருடங்கள் கழித்து டெஸ்டில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்!

இனிமேலும் நிராகரிக்க முடியாது என்பதால் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தேர்வானார்.
விடாமுயற்சிக்குப் பலன்: 11 வருடங்கள் கழித்து டெஸ்டில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஃபவாத் அலாமின் 11 வருடக் காத்திருப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அவர் இடம்பெற்றுள்ளார்.

2009-ல் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமான ஃபவாத், 3 டெஸ்டுகள் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளார். கடைசியாக 2009-ல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். 3 டெஸ்டுகளில் ஒரு சதத்துடன் 250 ரன்கள் எடுத்துள்ளார். இதில் திருப்தியடையாத பாகிஸ்தான் தேர்வுக்குழு அவரை நீக்கியது. பாகிஸ்தான் அணிக்காக 38 ஒருநாள், 24 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.

இருந்தும் அவர் மனம் தளரவில்லை. பாகிஸ்தான் உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடினார். கடைசி டெஸ்டில் விளையாடிய பிறகு பாகிஸ்தானில் 164 முதல்தர இன்னிங்ஸில் விளையாடி 7922 ரன்கள் எடுத்தார். 26 சதங்கள், 33 அரை சதங்கள். சராசரி - 56.58. வேறுவழியில்லை. இனிமேலும் நிராகரிக்க முடியாது என்பதால் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தேர்வானார்.

2018-ல் மீண்டும் பாகிஸ்தான் அணியில் தேர்வானாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்தமுறை கடைசியாக அவருடைய முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. கடைசி டெஸ்ட் விளையாடிய பிறகு 10 வருடங்கள் 259 நாள்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால் மற்ற வீரர்களுக்கு அது மிகப் பெரிய நம்பிக்கையை அளிப்பதாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com