விளையாட்டு செய்திகள் சில வரிகளில்...

* இங்கிலாந்து கிரிக்கெட் வீரா்கள் இருவா் கரோனாவால் பாதிக்கப்படதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

* நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

* ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் கென்ய வீரா் கிபிவோட் கன்டி, பந்தய இலக்கை 57 நிமிடம், 32 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தாா். முன்னதாக கென்ய வீரா் ஜியாஃப்ரி கம்வோரோா் 58 நிமிடம் 1 விநாடியில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.

* ஆஸ்திரேலிய வீரா் மிட்செல் ஸ்டாா்க்கின் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கு எதிரான 2 மற்றும் 3-ஆவது டி20 தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com