அபுதாபி டி10 போட்டியில் பங்கேற்கும் கெய்ல், ரஸ்ஸல்!

அபுதாபி டி10 போட்டியில் பங்கேற்பதை கெய்ல், ரஸ்ஸல், அப்ரிடி போன்ற பிரபல வீரர்கள் உறுதி செய்துள்ளார்கள். 
அபுதாபி டி10 போட்டியில் பங்கேற்கும் கெய்ல், ரஸ்ஸல்!

அபுதாபி டி10 போட்டியில் பங்கேற்பதை கெய்ல், ரஸ்ஸல், அப்ரிடி போன்ற பிரபல வீரர்கள் உறுதி செய்துள்ளார்கள். 

ஜனவரி மாதம் தொடங்கவுள்ள அபுதாபி டி10 போட்டியில் எட்டு அணிகள் மீண்டும் பங்கேற்கவுள்ளன.

ஐந்து நாள் கிரிக்கெட், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக வேறொரு வடிவம் எடுத்தது. பிறகு டி20 கிரிக்கெட், ஆரம்பித்த வேகத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றங்களால் கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் கிடைத்தன. இப்போது 10 ஓவர் கிரிக்கெட் அமலுக்கு வந்துள்ளது. எனினும் தற்போது லீக் அளவில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது. அபுதாபி டி10 லீக் போட்டியின் ஒவ்வொரு ஆட்டங்களும் 90 நிமிடங்கள் நடக்கும். 10 ஓவர்கள் மட்டுமே ஓர் அணிக்கு வழங்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஷாஜி உல் முல்க், 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் 2017 முதல் நடத்தி வருகிறார். இதற்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ஐபிஎல் போட்டியை பிசிசிஐ நடத்துவதுபோல டி10 லீக் போட்டியை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம் அங்கீகரித்துள்ளது. 

2019-ல் நடைபெற்ற டி10 லீக் போட்டியை டுவைன் பிராவோ தலைமையிலான மராத்தா அராபியன்ஸ் அணி வென்றது. இந்த வருடத்துக்கான அபுதாபி டி10 லீக் போட்டி நவம்பர் 19 முதல் 28 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

4-வது அபுதாபி டி10 போட்டி, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 6 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியிலும் கடந்த வருடம் போல எட்டு அணிகளும் பங்கேற்கவுள்ளன. 

இந்த வருடமும் அபுதாபியில் உள்ள ஷேக் ஜயத் கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து டி10 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. முதல் இரு வருடங்களில் இப்போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. எனினும் 2019 முதல் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த வருட அபுதாபி டி10 போட்டியில் பங்கேற்பதை கெய்ல், அப்ரிடி போன்ற பிரபல வீரர்கள் உறுதி செய்துள்ளார்கள். ரஸ்ஸல், பிராவோ, நரைன் போன்ற வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். அபுதாபி அணியில் கெய்லும் ரஸ்ஸல் நார்தர்ன் வாரியஸ் அணியிலும் டுவைன் பிராவோ தில்லி புல்ஸ் அணியிலும் நரைன் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியிலும் விளையாடவுள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com