2-ஆவது டெஸ்டில் வார்னர், அப்பாட் இல்லை

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பெளலர் சீன் அப்பாட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. 
2-ஆவது டெஸ்டில் வார்னர், அப்பாட் இல்லை


ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பெளலர் சீன் அப்பாட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. 
காயத்துக்காக சிகிச்சை பெற "பயோ-பபுள்' பாதுகாப்பு வளையத்தைவிட்டு அவர்கள் வெளியேறியிருந்ததால், தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் அவர்களை அணியில் சேர்க்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது வார்னருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது சீன் அப்பாட்டுக்கு கால் தசையில் காயமானது. இதனால் இருவருமே இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவில்லை. 
காயத்துக்கான சிகிச்சை பெற்ற வார்னர் மற்றும் அப்பாட் இருவருமே சிட்னியில் இருந்தனர். இந்நிலையில் அங்கு கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமானதை அடுத்து இருவரையுமே மெல்போர்னுக்கு இடமாற்றியது ஆஸ்திரேலிய வாரியம். 
அங்குதான் வரும் சனிக்கிழமை இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ளது. 
இந்நிலையில், ஆஸ்திரேலிய வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "சிட்னியில் வார்னரும், அப்பாட்டும் கரோனா பரவல் தீவிரமாக இருந்த பகுதிகளில் தங்கியிருக்கவில்லை. எனினும், பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறவுள்ள நிலையில் சிட்னியில் இருந்து வரவழைக்கப்பட்ட அவர்களை அணிக்குள்ளாக சேர்ப்பதற்கு கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் இடமளிக்கவில்லை. 
எனவே, வார்னரும், அப்பாட்டும் தங்களது உடற்தகுதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தற்போது மெல்போர்னில் தொடர்வார்கள். இந்தியாவுக்கு எதிராக ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கும் 3-ஆவது டெஸ்டில் அவர்கள் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படுவார்கள். 
பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய வாரியம் கூறியுள்ளது.  
இதனிடையே வார்னர் தனது காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com