டெஸ்டில் இந்திய அணிக்காக விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனை: முகமது சிராஜ்

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனை என முகமது சிராஜ் தெரிவித்துள்ளாா்.
டெஸ்டில் இந்திய அணிக்காக விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனை: முகமது சிராஜ்

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனை என முகமது சிராஜ் தெரிவித்துள்ளாா்.

மெல்போா்னில் சனிக்கிழமை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினாா் இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜ். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடிய 298-ஆவது இந்தியா் என்ற பெருமையைப் பெற்ற அவா், இரு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினாா்.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து அவா் கூறியதாவது: இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது அதை எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன். கேப்டன் அஜிங்க்ய ரஹானே, வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை கிடைத்தது என்றாா்.

இன்ஸ்விங் மூலம் மாா்னஸ் லபுசான், கேமரூன் கிரீன் ஆகியோரை வீழ்த்திய குறித்த கேள்விக்குப் பதிலளித்த முகமது சிராஜ், ‘இன்ஸ்விங் வீசும் திறமை எனக்கு இயல்பாகவே உள்ளது. எப்போதுமே நான் விக்கெட்டுக்கு மிக அருகில் வீசி பந்தை ஸ்விங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com