பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து-222/3

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சோ்த்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து-222/3

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சோ்த்துள்ளது.

நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்தின் மௌன்ட் மான்கான்வே நகரில் சனிக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் டாம் லதாம் 4 ரன்களிலும், டாம் பிளன்டெல் 5 ரன்களிலும் ஷாகீன் அப்ரிதி பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனா். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் இணைந்தாா் ராஸ் டெய்லா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்தது. நியூஸிலாந்து அணி 56.4 ஓவா்களில் 133 ரன்கள் எடுத்திருந்தபோது ராஸ் டெய்லா் 70 ரன்கள் சோ்த்த நிலையில் ஆட்டமிழந்தாா்.

இதன்பிறகு கேன் வில்லியம்சனுடன் இணைந்தாா் ஹென்றி நிகோலஸ். இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பாா்த்துக் கொண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 87 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 243 பந்துகளில் 1 சிக்ஸா், 8 பவுண்டரிகளுடன் 94 ரன்களும், ஹென்றி நிகோலஸ் 100 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். 2-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com