ஆஸி. அணியில் வார்னர், புக்கோவ்ஸ்கி: ஜோ பர்ன்ஸ் வெளியேற்றம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸி. அணியில் வார்னர், புக்கோவ்ஸ்கி: ஜோ பர்ன்ஸ் வெளியேற்றம்

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபார்மில் இல்லாத ஜோ பர்ன்ஸ் வெளியேற்றப்பட்டு, காயத்திலிருந்து மீண்டுள்ள டேவிட் வார்னர், வில் புக்கோவ்ஸ்கி சேர்க்கப்பட்டுள்ளனர். 

முதல் இரு டெஸ்டுகளின் 4 இன்னிங்ஸ்களில் பர்ன்ஸ் முறையே 8, 51(நாட் அவுட்), 0, 4 ரன்கள் எடுத்துள்ளார். அணியின் தேர்வாளர்கள் எதிர்பார்த்த ஃபார்முடன் அவர் விளையாடவில்லை. 4 டெஸ்டுகளை கொண்ட தொடர் தற்போது சமநிலையில் இருப்பதால், வெற்றியை வசப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய அணி இறங்கியுள்ளது. 

அந்த வகையில் பர்ன்ûஸ அணியிலிருந்து விடுவித்து, காயத்திலிருந்து மீண்டுள்ள வார்னர், புக்கோவ்ஸ்கி, சீன் அப்பாட் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தேசிய தேர்வாளர் டிரெவர் ஹான்ஸ் கூறுகையில், "சிட்னி டெஸ்டுக்கான அணியில் இருந்து பர்ன்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்பார்த்த ஃபார்மை அவரால் ஆட்டத்தில் வெளிப்படுத்த முடியவில்லை. அவர் பிரிஸ்பேன் டெஸ்டுக்காக அணிக்குத் திரும்பலாம். 

டேவிட் வார்னர், வில் புக்கோவ்ஸ்கி, சீன் அப்பாட் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் வியாழக்கிழமை இணைந்து சிட்னி டெஸ்டுக்கு தயாராவார்கள். இடுப்புக் காயத்திலிருந்து மீண்டுள்ள வார்னர், பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அவருக்கு கடைசி வரை வாய்ப்பு வழங்கப்படும். கால் தசைப் பகுதியில் காயமடைந்த சீன் அப்பாட் முழுமையாக குணமடைந்துவிட்டார். 

தலையில் காயமடைந்த புக்கோவஸ்கி, விளையாடும் கட்டத்தை படிப்படியாக நெருங்கி வருகிறார். அதற்கான கடைசி நிலையில் தற்போது இருக்கிறார். விதிகள் மற்றும் சுயமதிப்பீடு அடிப்படையில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படும்' என்று கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி: டிம் பெய்ன் (கேப்டன்), சீன் அப்பாட், பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுசான், நாதன் லயன், மைக்கெல் நேசர், ஜேம்ஸ் பட்டின்சன், வில் புக்கோவ்ஸ்கி, ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com