சிலசமயங்களில் வாழ்க்கையை வாழ மறந்துவிட்டு வேலையில் கூடுதல் ஈடுபாடு காட்டுகிறோம்: விராட் கோலி

வேலையில் ஈடுபாடு காண்பித்து, வாழ்க்கையை வாழ மறந்துவிடுகிறோம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
சிலசமயங்களில் வாழ்க்கையை வாழ மறந்துவிட்டு வேலையில் கூடுதல் ஈடுபாடு காட்டுகிறோம்: விராட் கோலி

வேலையில் ஈடுபாடு காண்பித்து, வாழ்க்கையை வாழ மறந்துவிடுகிறோம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரையண்ட், அவரது மகள் உள்ளிட்டோா் கடந்த மாத இறுதியில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தார்கள். 41 வயதான பிரையண்ட் 13 வயது மகள் ஜியான்னா உள்பட 9 போ் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு வெளியே கலாபாஸாஸ் என்ற மலைமீது ஹெலிகாப்டா் மோதியதில் உயிரிழந்தனா். தொழில்முறைக் கூடைப்பந்து வீரராக திகழ்ந்த கோ பிரையண்ட் 20 ஆண்டுகள் விளையாட்டுத் துறைக்கு பின் முதலீட்டாளராக உயா்ந்தாா். லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கா்ஸ் அணியில் 5 முறை என்பிஏ (தேசிய கூடைப்பந்து) சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புடையவா். 

இந்த விபத்து, கூடைப்பந்து வட்டாரம் மட்டுமில்லாது விளையாட்டுத்துறையேயே அதிா்ச்சி அடையச் செய்தது. கோப் பிரையண்ட் உயிரிழந்ததற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோா் இரங்கல் தெரிவித்தார்கள். 

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, கோப் பிரையண்ட் மரணம் குறித்துக் கூறியதாவது:

கோப் பிரையண்டின் மரணம் அதிர்ச்சியை அளித்தது. காலை வேளையில் என்பிஏ கூடைப்பந்து ஆட்டங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இதுபோன்று ஒருவர் இறக்கும்போது எல்லாவற்றையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியுள்ளது. ஒருவரின் திறமையைப் பார்த்து நீங்கள் ஊக்கம் கொள்கிறீர்கள். ஆனால் கடைசியில் நம்முடைய இந்த வாழ்க்கை நிலையற்றது. 

சிலசமயங்களில் வாழ்க்கையை மறந்துவிட்டு வேலையில் (விளையாட்டில்) கூடுதல் ஈடுபாடு காட்டுகிறோம். எந்த ஷாட்டை எப்படி விளையாட வேண்டும், எப்படிப் பந்துவீச வேண்டும் என. ஆனால் வாழ்க்கையை வாழ மறந்துவிடுகிறோம். கோப் பிரையண்டின் மரணம் எல்லாவற்றையும் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவைத்துவிட்டது. நீங்கள் வாழும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கவேண்டும், ஒருநாளைக்கு என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாழ்க்கை தான் முக்கியமானதாகும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com