ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஒற்றை வாக்கில் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளிய வார்னர்!

ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஒற்றை வாக்கில் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளிய வார்னர்!

ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை (2020) டேவிட் வார்னர் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தட்டிச் சென்றுள்ளார்.


ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை (2020) டேவிட் வார்னர் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தட்டிச் சென்றுள்ளார்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் இன்று (திங்கள்கிழமை) மெல்போர்னில் வழங்கப்பட்டது. இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை டேவிட் வார்னர் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஆலன் பார்டர் பதக்கத்தை டேவிட் வார்னர் 194 வாக்குகள் பெற்று கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 193 வாக்குகளும், பாட் கம்மின்ஸ் 185 வாக்குகளும் பெற்றனர். பெலிந்தா கிளார்க் விருதை எலைஸ் பெர்ரி இரண்டாவது முறையாகக் கைப்பற்றினார்.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: ஆரோன் ஃபின்ச்

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை: அலைஸா ஹீலி

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: மார்னஸ் லாபுஷேன்

சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்: டேவிட் வார்னர்

சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீராங்கனை: அலைஸா ஹீலி

பெலிந்தா கிளார்க் விருது: எலைஸ் பெர்ரி

ஆலன் பார்டர் பதக்கம்: டேவிட் வார்னர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com