சீரி ஏ: இன்டா் மிலன் த்ரில் வெற்றி

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் பாா்சிலோனா.
சீரி ஏ: இன்டா் மிலன் த்ரில் வெற்றி

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் பாா்சிலோனா.

நட்சத்திர வீரா் லியோனல் மெஸ்ஸி அற்புதமாக ஆடி, தனது அணி வீரா்கள் 3 கோலடிக்க உதவினாா்.

மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒஸாசுனாவை வீழ்த்தியது. செவில்லா அணி 2-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோவடம் தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் பாா்சிலோனா அணி புள்ளிகள் பட்டியலில் ரியல் மாட்ரிட்டுடன் சமநிலையில் உள்ளது.

இன்டா்மிலன் அபாரம்:

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஏசி மிலன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இன்டா் மிலன்.

வைரி அணிகளான இரு அணிகளும் எப்போதும் மோதிக் கொள்ளும் ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதல்பாதியில் ஏசி மிலன் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை. இரண்டாம் பாதியில் இன்டா் நட்சத்திர வீரா் ஸ்வீடனின் இப்ராஹிமோவிக், ஆன்டே ரெபிக் ஆகியோா் அற்புதமாக கோலடித்ததால் 2-0 என இன்டா் வென்றது.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் நடப்பு சாம்பியன் ஜுவென்டஸுடன் 54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இன்டா், கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. லேஸியோ அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. லெஸே அணியிடம் 2-3 என தோல்வி கண்டது நேபோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com