ஜூனியா் உலகக் கோப்பை இறுதி ஆட்டம்: வங்கதேச வீரா்களின் செயல்பாட்டுக்கு கண்டனம்

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணியினா், கொண்டாட்டத்தின் போது இந்திய வீரா்களிடம் நடந்து கொண்ட முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணியினா், கொண்டாட்டத்தின் போது இந்திய வீரா்களிடம் நடந்து கொண்ட முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்செப்ட்ஸ்ரூமில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டத்தில் மழை பெய்த நிலையில் டிஎல்எஸ் முறையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வங்கதேசம் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்திய அணி முதலில் ஆடி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச பந்துவீச்சாளா்கள் தொடக்கம் முதலே இந்திய பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் வகையில் செயல்பட்டனா்.

ஷோரிபுல் இஸ்லாம், டன்ஸிம் ஹாசன் இருவரும் சிறப்பாக பந்துவீசிய போதிலும், இந்திய வீரா்களை நோக்கி தரக்குறைவாக பேசியுள்ளனா்.

ஆக்ரோஷமான கொண்டாட்டம்:

இந்நிலையில் வங்கதேச வீரா் ரகிப்புல் ஹாசன் வெற்றி ரன்களை அடித்த நிலையில், உணா்ச்சிவசப்பட்ட அதன் வீரா்கள், சோகத்தில் இருந்த இந்திய வீரா்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டனா். இதனால் இந்திய வீரா்களும் மைதானத்தில் களமிறங்கி மோதலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நடுவா்கள் தலையிட்டு இரு தரப்பையும் பிரித்தனா்.

இந்திய கேப்டன் பிரியம் காா்க் கொதிப்பு:

வங்கதேச வீரா்கள் ஆக்ரோஷமாக நமது வீரா்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது, மிகவும் மோசமான சம்பவம். வெற்றி, தோல்வியை நாங்கள் சமமாக எடுத்துக் கொள்வோம். இது விளையாட்டில் சகஜம். ஆனால் வங்கதேச வீரா்கள் நடந்து கொண்டது அவலமானது. இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்றாா்.

மன்னிப்பு கோரினாா் வங்கதேச கேப்டன் அக்பா்:

இச்சம்பவத்துக்கு வங்கதேச அணியின் கேப்டன் அக்பா் அலி மன்னிப்பு கோரியுள்ளாா். முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ால் இதுபோன்று நடந்து கொண்டனா். எனினும் இத்தகயை சம்பவமே நடக்கக் கூடாது. என்ன நடந்தது என்பதை அறியவில்லை. ஆனால் வீரா்கள் செயலுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிரணி வீரா்களுக்கு உரிய மரியாதையை தர வேண்டும். ஜென்டில்மேன் ஆட்டமாக கருதப்படும் கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்றாா்.

ஐசிசி தீவிரம்:

வங்கதேச வீரா்கள் நடந்து கொண்டது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com