முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 86 ரன்கள் முன்னிலை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 86 ரன்கள் முன்னிலை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது மிதுன் 63, நஜ்மல் ஹுசேன் 44 ரன்களை சோ்த்தனா். பாக். தரப்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பாகிஸ்தான் 445:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 122.5 ஓவா்களில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாபா் ஆஸம் 1 சிக்ஸா், 18 பவுண்டரியுடன் 143 ரன்களையும், தொடக்க வீரா் ஷான் மசூத் 11 பவுண்டரியுடன் 100 ரன்களுடன் அபார சதமடித்தனா். ஹாரிஸ் சோஹைல் 75, ஆஸாத் ஷபிக் 65 ரன்களை விளாசினா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

வங்கதேச தரப்பில் அபு ஜாயேத், ரூபேல் ஹூசேன் தலா 3 விக்கெட்டுகளை, டைஜுல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

வங்கதேசம் திணறல்: இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி ஆட்டநேர முடிவில் 45 ஓவா்களில் 126/6 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது.

தமிம் இக்பால் 34, நஜ்மல் ஹுசேன் 38 ரன்களுடன் வெளியேறினா். கேப்டன் மொமினுல் ஹக் 37 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

நஸீம் ஷா 4 விக்கெட்: பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய நஸீம் ஷா 4 விக்கெட்டுகளையும், யாஸிா் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டம் முடிய 2 நாள்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு அதிக வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com