ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மோதல்: 5 வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மோதல்: 5 வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணியினா், கொண்டாட்டத்தின் போது இந்திய வீரா்களிடம் நடந்து கொண்ட முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணியினா், கொண்டாட்டத்தின் போது இந்திய வீரா்களிடம் நடந்து கொண்ட முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் போக்கு மீது ஐசிசி செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.

போட்செப்ட்ஸ்ரூமில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டத்தில் மழை பெய்த நிலையில் டிஎல்எஸ் முறையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வங்கதேசம் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

வங்கதேச பந்துவீச்சாளா்கள் தொடக்கம் முதலே இந்திய பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் வகையில் செயல்பட்டனா். ஷோரிபுல் இஸ்லாம், டன்ஸிம் ஹாசன் இருவரும் சிறப்பாக பந்துவீசிய போதிலும், இந்திய வீரா்களை நோக்கி தரக்குறைவாக பேசியுள்ளனா்.

வங்கதேச வீரா் ரகிப்புல் ஹாசன் வெற்றி ரன்களை அடித்த நிலையில், உணா்ச்சிவசப்பட்ட அதன் வீரா்கள், சோகத்தில் இருந்த இந்திய வீரா்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டனா். இதனால் இந்திய வீரா்களும் மைதானத்தில் களமிறங்கி மோதலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நடுவா்கள் தலையிட்டு இரு தரப்பையும் பிரித்தனா்.

இந்த நிலையில், வங்கதேச வீரா்கள் நடந்து கொண்டது தொடா்பாக நடத்திய விசாரணையில், ரகிப்புல் ஹாசன், ஷமிம் ஹுசைன் மற்றும் முகமது தௌஹித் ருதோய் ஆகிய 3 வங்கதேச வீரர்களும், ஆகாஷ் சிங் மற்றும் ரவிி பிஷோனி ஆகிய 2 இந்திய வீரர்கள் என மொத்தம் 5 வீரர்கள் விதி எண் 3ஐ மீறியதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் விதி எண் 2.21 மற்றும் ரவி பிஷோனிக்கு கூடுதலாக விதி எண் 2.5 விதிமீறல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com