டி20: கடைசிப் பந்தில் பரபரப்பாக வெற்றி பெற்ற இங்கிலாந்து (விடியோ இணைப்பு)

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பரபரப்பான முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: கடைசிப் பந்தில் பரபரப்பாக வெற்றி பெற்ற இங்கிலாந்து (விடியோ இணைப்பு)

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பரபரப்பான முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டர்பனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. ராய் 29 பந்துகளில் 40 ரன்களும் பேர்ஸ்டோவ் 17 பந்துகளில் 35 ரன்களும் ஸ்டோக்ஸ் 30 பந்துகளில் 47 ரன்களும் மொயீன் அலி 11 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார்கள். மொயீன் அலி 4 சிக்ஸர்களும் பேர்ஸ்டோவ் 3 சிக்ஸர்களும் அடித்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடினமான இலக்கை நன்கு எதிர்கொண்டது தென் ஆப்பிரிக்க அணி. அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர்கள் குயின் டி காக்கும் பவுமாவும் பவர்பிளேயில் 69 ரன்கள் குவித்தார்கள். டி காக் 17 பந்துகளில் அரை சதமெடுத்து, டி20யில் விரைவாக அரை சதமெடுத்த தெ.ஆ. வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். அவர் 65 ரன்களில் வெளியேறினார். 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் கிடைத்தது. பிறகு வான் டர் டுஸன் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தார். கடைசி ஓவரில் தெ.ஆ. அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டன. முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் கிடைத்தன. இதனால் கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்கிற நிலைமை உருவானது. பிறகு 2 பந்துகளில் 3 ரன்கள். ஆனால் அந்தக் கடைசி 2 பந்துகளிலும் டாம் கரண் விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். வான் டர் டுஸன் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் அவரால் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ள முடியாமல் போனது. கடைசி இரு ஓவர்களில் அவர் விளையாட 1 பந்து மட்டுமே கிடைத்தது கூட தெ.ஆ. அணி தோல்வி பெற ஒரு காரணமாக இருக்கலாம். 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமன் பெற்றுள்ளது. மூன்றாவது டி20 ஆட்டம் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com