கோலிக்குச் சுதந்திரம் அளித்து கோப்பையை வெல்லுங்கள்: ஆர்சிபிக்கு விஜய் மல்லையா கோரிக்கை!

கோலிக்குச் சுதந்திரம் அளித்து கோப்பையை வெல்லுங்கள்: ஆர்சிபிக்கு விஜய் மல்லையா கோரிக்கை!

அவரிடம் விட்டுவிடுங்கள். அவருக்கான சுதந்திரத்தை அளியுங்கள்...

ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் (ஆர்சிபி) இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆர்சிபி அணி.

அதன்படி, லோகோவின் வடிவத்தை மாற்றியுள்ளார்கள். இந்தப் புதிய லோகோ அணிக்கு ராசியாக அமையும் என நம்புகிறது ஆர்சிபி அணி. இந்நிலையில் லோகோ மாற்றம் குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியதாவது:

புதிய லோகோ அபாரமாக உள்ளது. ஆனால் கோப்பையை வெல்லுங்கள்.

யு-19 அணியிலிருந்து ஆர்சிபி அணிக்கு வந்தார் கோலி. இந்திய அணியின் சிறந்த கேப்டனாகவும் திறமைசாலியாகவும் உள்ளார். அவரிடம் விட்டுவிடுங்கள். அவருக்கான சுதந்திரத்தை அளியுங்கள். எல்லா ஆர்சிபி ரசிகர்களும் ஐபிஎல் கோப்பைக்காக நீண்ட நாள் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி விட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்த அனுமதித்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உயா்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com