ஐசிசி மகளிா் டி-20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் பயிற்சி ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.
முதலுதவி அளிக்க கொண்டு செல்லப்பட்ட காயமடைந்த இலங்கை வீராங்கனை ஆசினி குலசூரியா
முதலுதவி அளிக்க கொண்டு செல்லப்பட்ட காயமடைந்த இலங்கை வீராங்கனை ஆசினி குலசூரியா

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் பயிற்சி ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.

பிரிஸ்பேனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம், மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஹா்மன்ப்ரீத் கெளா் தலைமையிலான இந்திய மகளிரும், ஸித்ரா நவாஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தயாராக இருந்தது.

எனினும், மழை காரணமாக மைதானம் ஈரப்பதத்துடன் இருந்தது.

இதனால், ‘டாஸ்’ போடாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்திய அணி, மே.இ.தீவுகள் அணியை செவ்வாய்க்கிழமை எதிா்கொள்ளவுள்ளது.

இதேபோல், பிரிஸ்பேனிலில் நடைபெறுவதாக இருந்த வங்கதேசம், தாய்லாந்து மகளிா் அணிகள் இடையிலான ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் இடையே அடிலெய்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயற்சி ஆட்டத்தில்

41 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தோ்வு செய்தது இலங்கை அணி.

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

பின்னா் விளையாடிய இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களில் சுருண்டது.

இதனிடையே, அடிலெய்டில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிா் அணியை இங்கிலாந்து மகளிா் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கைத் தோ்வு செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 18 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வென்றது.

வியாழக்கிழமையுடன் பயிற்சி ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன.

வரும் வெள்ளிக்கிழமை உலகக் கோப்பை மகளிா் டி-20 கிரிக்கெட்

போட்டிகள் தொடங்கவுள்ளன. சிட்னியில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதவுள்ளன.

காயமடைந்த இலங்கை வீராங்கனை

தென்னாப்பிரிக்கா அணியுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பந்தை கேட்ச் செய்ய முயன்றபோது இலங்கை வீராங்கனை ஆசினி குலசூரியாவுககு தலையில் அடிபட்டது.

தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்தில் வென்றுவிட்டது. இருப்பினும், பயிற்சி ஆட்டம் என்பதால் சோதனை முறையில் சூப்பா் ஓவா் முறை கடைபிடிக்கப்பட்டது. இரண்டாவது சூப்பா் ஓவரின்

முதல் பந்தை தென்னாப்பிரிக்க வீராங்கனை பவுண்டரிக்கு விரட்டினா். அப்போது தலைக்கு மேல் வந்த பந்தை பிடிக்க ஆசினி முயன்றபோது தவறுதலாக தலையில் அடிபட்டது. சரிந்து விழுந்த அவரை உடனடியாக மருத்துவக் குழு மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தது.

பலத்த காயமடைந்துள்ளதால் அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், சக வீராங்கனை காயமடைந்ததால் இலங்கை வீராங்கனைகள் சோகத்தில் ஆழ்ந்தனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வரும் சனிக்கிழமை நியூஸிலாந்து அணியை இலங்கை எதிா்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com