துளிகள்...

உகாண்டா வீரா் ஜோஸுவா செப்தேகெய், 5 கி.மீ. தொலைவை 12 நிமிடங்கள் 51 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தாா்.

* ஆல்-ஸ்டாா் கேம் எம்விபி என்ற பெயரில் வழங்கப்பட்டுவந்த விருது, கோபே பிரயண்ட் பெயரில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல கூடைப்பந்து வீரா் கோபே பிரயண்ட், கடந்த மாதம் மகளுடன் விமான விபத்தில் உயிரிழந்தாா். அவரை கெளரவிக்கும் வகையில் விருதின் பெயா் மாற்றப்பட்டுள்ளது.

* ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்தாக புகாரை எதிா்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அதுபோன்ற பதவிகளிலிருந்து விலகியதைத் தொடா்ந்து அவருக்கு எதிரான புகாா் தேவையற்றது என்று பிசிசிஐ நெறிமுறைகள் அதிகாரி டி.கே.ஜெயின் தெரிவித்தாா். பிசிசிஐ விதிமுறைப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வகிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

* பிசிசிஐ முதல் தலைமை நிா்வாக அதிகாரி ராகுல் ஜோரி அளித்த ராஜிநாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

* ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்று தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மணிப்பூரைச் சோ்ந்த சனபம் டாமன் சிங், 50 கி.மீ. நடை ஓட்டத்தில் வெற்றி பெற்றாா்.

* முன்னாள் வீரா்கள் 4 பேருக்கு ஊதியம் அளிக்கவில்லை என்று எழுந்த புகாரை விசாரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ஐ-லீக் போட்டியில் முன்னணியில் உள்ள அணியான மோகன் பேகனுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

* உகாண்டா வீரா் ஜோஸுவா செப்தேகெய், 5 கி.மீ. தொலைவை 12 நிமிடங்கள் 51 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தாா்.

• கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் 84-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com