அப்பாவாகும் குஷியில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகும் நியூஸி. வேகப்பந்து வீச்சாளர்

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.

நாளை மறுநாள் தொடங்கவுள்ள முதல் டெஸ்டிலிருந்து நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் விலகவுள்ளார். அவருடைய முதல் குழந்தை இந்த வாரம் பிறக்கவுள்ளதால் அதன் காரணமாக முதல் டெஸ்டில் வாக்னர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதுவரை 47 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வாக்னர், 204 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இதையடுத்து வாக்னருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான மேட் ஹென்றி நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

முதல் குழந்தை பிறக்கவுள்ளதால் வாக்னர், வெல்லிங்டனுக்குச் செல்ல மாட்டார். குழந்தை பிறக்கும் வரை அவர் தவுரங்காவிலேயே இருப்பார். அவருக்குப் பதிலாக அணியில் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com