டி20 ஆட்டத்துக்கு ஜடேஜா, சஹாலைத் தேர்வு செய்யாதது ஏன்: விராட் கோலி விளக்கம்

இந்த டி20 ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரையும் குல்தீப் யாதவையும் தேர்வு செய்ததற்குக் காரணம்...
டி20 ஆட்டத்துக்கு ஜடேஜா, சஹாலைத் தேர்வு செய்யாதது ஏன்: விராட் கோலி விளக்கம்

குவாஹாட்டியில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் ஆட்டம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 142/9 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் 3-23 விக்கெட்டுகளையும், சைனி 2-18, குல்தீப் 2-38, பும்ரா, சுந்தர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. இந்தியத் தரப்பில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 6 பவுண்டரியுடன் 45 ரன்களையும், ஷிகர் தவன் 32 ரன்களும் எடுத்தார்கள். ஷ்ரேயஸ் ஐயர் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 ரன்களும் கேப்டன் விராட் கோலி 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 17 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. கடைசி டி20 ஆட்டம் வெள்ளியன்று புணேவில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு விராட் கோலி, பேட்டியளித்ததாவது:

இந்த டி20 ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரையும் குல்தீப் யாதவையும் தேர்வு செய்ததற்குக் காரணம், ஆட்டத்தில் நிலவிய சூழல் தான். இலங்கை அணியில் ஏராளமான இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். எனவே தான் அவர்களைத் தேர்வு செய்தோம். குல்தீப்பும் வாஷிங்டனும் பந்தை இடக்கை பேட்ஸ்மேனுக்குச் சிரமம் ஏற்படும்படி வெளியே வீசுவார்கள். ஆனால் எதிரணியில் வலக்கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் ஜடேஜாவும் சஹாலும் அச்சுறுத்தலாக விளங்குவார்கள். டி20 ஆட்டத்தில் ஒரு கேப்டனாக உங்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பந்துவீச்சாளர்கள் தேவை என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com