நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை: உலகக் கோப்பை ரன் அவுட் குறித்து இப்போதும் வருந்தும் தோனி!

அப்போது நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்...
நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை: உலகக் கோப்பை ரன் அவுட் குறித்து இப்போதும் வருந்தும் தோனி!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது.

10 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்கிற நிலையில் இந்திய அணி இருந்தபோது 50 ரன்களில் இருந்த தோனி ரன் அவுட் ஆனார். சில அங்குல இடைவெளியில் தோனி ரன் அவுட் ஆனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவேளை தோனி ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி அரையிறுதியில் வென்றிருக்கவும் வாய்ப்பிருந்தது. 

இந்நிலையில் பேட்டியொன்றில் இந்த ஆட்டம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் தோனி. அவர் கூறியதாவது:

முதல் ஆட்டத்திலும் இந்த ஆட்டத்திலும் ரன் அவுட் ஆனேன். அப்போது நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். அந்த இரு அங்குல வித்தியாசம், நான் பாய்ந்து விழுந்திருக்க வேண்டும் என்று இப்போதும் சொல்ல வைக்கிறது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com