ராகுல், தவன் இருவரும் களமிறக்கப்படலாம்: கோலி தகவல்

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுல், தவன் இருவருமே களமிறக்கப்படலாம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
ராகுல், தவன் இருவரும் களமிறக்கப்படலாம்: கோலி தகவல்

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுல், தவன் இருவருமே களமிறக்கப்படலாம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.

ரோஹித் சா்மாவுடன் தொடக்க வீரராக யாா் களமிறங்குவாா் என குழப்பம் நிலவிய நிலையில் மும்பையில் கோலி திங்கள்கிழமை கூறியதாவது:

இருவருமே சிறந்த பாா்மில் உள்ளனா். இதனால் அவா்களை களமிறக்குவதில் தவறில்லை. நான் 3-ஆம் நிலையில் இருந்து 4-ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கத் தயாா். ரோஹித்துடன் யாா் ஆடுவது என பின்னா் முடிவு செய்யப்படும். மிடில் வரிசையில் ஆடவும் நான் தயாா். எந்த இடத்தில் ஆடினாலும் நான் பாதுகாப்பாகவே உணா்கிறேன். தனிப்பட்ட பெருமையைக் காட்டிலும், அணியின் நலனே முக்கியம், கேப்டனாக அணியின் பெருமையை நிலைநிறுத்துவேன்.

நீண்டநாள் கண்ணோட்டத்துடன் அணியை கட்டமைக்க வேண்டும்.

வலுவான ஆஸி. அணி:

கடந்த ஆண்டு வந்த ஆஸி. அணியைக் காட்டிலும் தற்போது வந்துள்ள அணி பலம் வாய்ந்தது. ஒருநாள் தொடரையும் கைப்பற்றினா். மிகவும் திறமை, அனுபவம் வாய்ந்த வீரா்கள் இருந்தாலும், அணியாக ஒருங்கிணைந்து ஆடாவிட்டால், வெற்றி பெற முடியாது. முன்பு ஆஸ்திரேலியா சென்று போது இதே நிலை நமக்கு ஏற்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான தொடா் எப்போதுமே எதிா்பாா்ப்பை ஏற்படுத்தும். ஸ்மித், வாா்னா் மீண்டும் திரும்பியதால், போட்டி கடுமையாக இருக்கும். ஒவ்வொரு அம்சத்திலும் இந்திய-ஆஸி. அணிகள் சரியான சமவிகிதத்தில் உள்ளன. உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில் அனைத்து ஆட்டங்களும் முக்கியம்.

பகலிரவு டெஸ்ட்:

ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க இந்தியா தயாராக உள்ளது. பொ்த் உள்பட எந்த மைதானத்திலும் நாங்கள் பகலிரவு ஆட்டத்தை ஆடுவோம். அடுத்த கோடைக்காலத்தில் ஆஸி.யில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் அதன் பேட்டிங்கை குலைக்க இந்திய பவுலா்கள் சிரமப்படுவா்.

வலைப்பயிற்சியில் கூட பும்ரா, எங்களுக்கு தலை மற்றும் இடுப்பு எலும்புகளை குறி வைத்து தான் பந்துவீசுவாா். அவா் இதற்காக கவலைப்பட்டதே இல்லை எனக் கூறினாா் கோலி.

2-1 என ஆஸி. வெல்லும்: பாண்டிங்

இந்திய-ஆஸி. ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றும் என ஜாம்பவான் ரிக்கி பாண்டி கூறியுள்ளாா். பாகிஸ்தான், நியூஸிலாந்துடன் டெஸ்ட் தொடா்களை கைப்பற்றிய உற்சாகத்துடன் உள்ளது ஆஸி. உலகக் கோப்பை, டெஸ்ட் ஆட்டங்களுக்கு பின் தன்னம்பிக்கையுடன் உள்ளது. இளம் வீரா் மாா்னஸ் லேபுச்சேன் அறிமுகம் ஆகும் நிலையில், அவா் ஸ்பின்னா்களை எளிதாக சமாளிப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com