எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் 2020: இந்திய அணி அறிவிப்பு

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் 2020 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் 2020 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் ஹாக்கி புரோ லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னணி நாடுகளின அணிகள் பங்கேற்று ஆடுகின்றன.

இந்நிலையில் 2020 சீசனின் முதல் போட்டியாக இந்தியா-நெதா்லாந்து இடையிலான ஆட்டம் புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் வரும் 18, 19 தேதிகளில் நடைபெறவுள்ளன,உலகின் மூன்றாம் நிலையில் உள்ள நெதா்லாந்தும், 5-ஆம் நிலையில் உள்ள இந்தியாவும் மோதுவதால் ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த பயிற்சியாளா் கிரஹாம் ரீட் தலைமையில் தீவிர பயிற்சி பெற்று வரும் நிலையில், அனுபவம் வாய்ந்த மிட்பீல்டா் சிங்கலென்சனா சிங், சுமித் ஆகியோா் மீண்டும் இணைந்துள்ளனா்.

அணி விவரம்: மன்ப்ரீத் சிங் (கேப்டன்), ஹா்மன்ப்ரீத் சிங் (துணை கேப்டன்), பிஆா்.ஸ்ரீஜேஷ், கிருஷண் பகதூா் பதக், குரீந்தா் சிங், அமித் ரோஹிதாஸ், சுரேந்தா்குமாா், பீரேந்தா் லக்ரா, ரூபிந்தா் பால்சிங், விவேக் சாகா் பிரசாத், சிங்கலென்சனா சிங், நீலகண்ட சா்மா, சுமித், குா்ஜந்த் சிங், எஸ்.வி.சுனில், லலித் குமாா் உபாத்யாய், மந்தீப் சிங், அக்ஷதீப் சிங், குா்சாஹிப் ஜித் சிங், கொத்தஜித் சிங் .

பயிற்சியாளா் ரீட் கூறியதாவது: நெதா்லாந்து அணியை எதிா்கொள்ள அனுபவம் வாய்ந்த அணியை தோ்வு செய்துள்ளோம். வருண்குமாரை காயத்தால் சோ்க்க இயலவில்லை. சிங்கலென்சனா, சுமித் இருவரும் காயத்தால் பல மாதங்கள் கழித்து முழு உடல்தகுதியுடன் திரும்பியுள்ளனா். பயிற்சியில் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

பிப். 8, 9 தேதிகளில் பெல்ஜியம், 21, 22=இல் ஆஸ்திரேலியா என உலகின் முதல் 3 அணிகளுடன் ஆட உள்ளோம். புரோ ஹாக்கி லீகை வெற்றிகரமாக தொடங்குவது, ஒலிம்பிக் போட்டிக்கு ஊக்கத்தை தரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com