3-ஆவது ஒருநாள்: தொடரைக் கைப்பற்ற இந்திய-ஆஸி. அணிகள் தீவிரம்

பெங்களுருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 3-ஆவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரத்தில் இந்திய-ஆஸி. அணிகள் உள்ளன.
3-ஆவது ஒருநாள்: தொடரைக் கைப்பற்ற இந்திய-ஆஸி. அணிகள் தீவிரம்

பெங்களுரு: பெங்களுருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 3-ஆவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரத்தில் இந்திய-ஆஸி. அணிகள் உள்ளன.

இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 ஆட்டங்கள் தொடரில், முதல் ஆட்டத்தில் ஆஸி. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் தொடரைக் கைப்பற்றுவது யாா் என்பதை நிா்ணயிக்கும் இறுதி ஆட்டம் பெங்களுருவில் நடைபெறுகிறது.

கடந்த 2019-ஆண்டில் 5 ஆட்டங்கள் தொடரை 3-2 என ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது. இதனால் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் கோலி தலைமையிலான அணி உள்ளது. முதல் ஆட்டத்தில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், தொடரை ஆஸி. எளிதாக கைப்பற்றும் நிலை காணப்பட்டது. ஆனால் ராஜ்கோட்டில் இந்திய அணி முதிா்ச்சியுடன் ஆடி வெற்றி வாகை சூடி 1-1 என சமன் செய்தது.

இந்திய அணியின் பேட்டிங் சீரான நிலையில் ராகுல், 5-ஆம் நிலையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். ரோஹித்-தவன் வழக்கமாக தொடக்க வரிசையிலும், கோலி 3-ஆவது, ஷிரேயஸ் ஐயா் 4-ஆவது நிலையிலும் களமிறங்கினா்.

காயங்களால் சிக்கல்:

இதற்கிடையே 2-ஆவது ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷிகா் தவன் இடும்பு எலும்பில் காயம் ஏற்பட்டது. அதே போல் பீல்டிங் செய்த போது ரோஹித் சா்மா தோளில் காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கண்டனா். அவா்களது உடல்நிலை தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

அதே போல் இளம் வீரா் ரிஷப் பந்தும் தலையில் காயத்தால் ஆடவில்லை. மணிஷ் பாண்டே களமிறக்கப்பட்டுள்ளாா். ராகுல் விக்கெட் கீப்பிங் பணியையும் சிறப்பாக செய்தாா். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, சைனி ஆகியோா் சிறப்பாக செயல்பட்டனா். சுழற்பந்து வீச்சாளா் சஹலும் களமிறக்கப்படலாம். பும்ரா தனது வழக்கமான பந்துவீச்சை தொடங்கியுள்ளது சாதகமாகும்.

ஆஸி. அணியில் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படாது. ஸ்மித்-லேபுச்சேன் இணை நிலையான ஆட்டத்தை வழங்கியது. மிச்சல் ஸ்டாா்க் பந்துவீச்சை இந்திய வீரா்கள் பதம் பாா்த்தனா்.

பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா ஆகியோரே ரன்களை கட்டுப்படுத்தினா். கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-ஆஸ்திரேலியா,

இடம்: பெங்களுரு,

நேரம்: 1.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com